Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அறுபதாம் திருமண பின்னணி

அறுபதாம் திருமண பின்னணி

அறுபதாம் திருமண பின்னணி

அறுபதாம் திருமண பின்னணி

ADDED : பிப் 05, 2009 04:48 PM


Google News
Latest Tamil News
<P>தம்பதியர் அறுபது வயது முடிந்ததும் திருமணம் செய்கின்றனர். இத்திருமணத் திற்கு என்று தனியான தத்துவப்பின்னணி உண்டு. இல்லற வாழ்வில் அறுபதுவயதுவரை மனிதன் ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கிறான். இதன்பிறகு உலகியல் பாசபந்தங்களை விட முயல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதே இத்திருமணம். எழுபது வயதில் மனிதன் மனமுதிர்ச்சி பெற்று ரிஷிகளைப் போன்று பக்குவநிலையை அடைகிறான். எண்பதாவது வயதில் எட்டுத்திசைகளையும் பாதுகாக்கும் தெய்வங்கள் மனிதனுக்கு வழிகாட்டுகின்றனர். தொண்ணூறாவது வயதில் நவக்கிரகங்களின் முழு ஆசியும் மனிதனுக்குக் கிடைக்கிறது. நூறாவது வயது அடைவது மிகவும் சிரமம். அப்போது ஐம்புலன்களின் செயல்கள் அனைத்தும் கட்டுப்பட்டு விடுகின்றன. இந்த உன்னதமான நிலையை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத் தான் 'நீ நூறு வயது வாழ வேண்டும்' என்று கூறிப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். அறுபது வயதில் சஷ்டியப்தப் பூர்த்தியையும், அறுபது வயதிற்குப் பிறகு, எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தையும் நடத்துவது நம்மை மேலும் மேலும் பக்குவமாக்கி உயர்நிலை அடைவதற்குத்தான். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us